விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, July 8, 2021

தூங்கும்போது திடீரென தூக்கி போடுகிறதா - மேலே இருந்து கீழே விழுவதுபோல கனவ...








இரவில் தூங்கும் போது சில சமயங்களில் திடீரென உடல் அதிர்ந்து விழிப்பு ஏற்படும். இந்த நிகழ்வின் பெயர் என்ன? இது போல் உங்களுக்கு நடந்திருக்கிறதா?

 

இந்நிகழ்வின் பெயர் ஹிப்னாஜிக் ஜர்க்ஸ் Hypnogogic jerk.

 

ஹிப்னாஜிக் ஜர்க்ஸ் Hypnogogic jerk:

 

ஹிப்னோகோஜிக் ஜெர்க்ஸ் அல்லது ஹிப்னிக் ஜெர்க்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

 

ஹிப்னகோஜிக் என்பது விழிப்புக்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது.

 

நீங்கள் தூங்கும்போது ஏற்படும் நரம்பு மண்டலத்தின் இயல்பான வீழ்ச்சியின் விளைவாகும். உங்கள் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு குறைந்து, உங்கள் உடல் வெப்பநிலை குறையும் போது இது ஏற்படுகிறது.

 

மிகவும் ஆழ்ந்த தூக்கத்தில் கனவில் மலைமீது இருந்து கீழே விழுவதுண்டு .

 

சில சமயத்தில் விழுந்த பிறகு பயத்தில் தூக்கத்திலிருந்து விழிப்பதுண்டு.

 

இது பெரும்பாலும் கட்டிலில் படுத்திருக்கும் போது நடக்கிறது.

 

சில விஞ்ஞானிகள் மன அழுத்தம், பதட்டம், சோர்வு, காஃபின் மற்றும் தூக்கமின்மை போன்ற சில காரணிகள் ஹிப்னிக் ஜெர்க்ஸின் தீவிரத்தை அதிகரிக்கக்கூடும் என்று நம்புகிறார்கள். ஆனால் இந்த விடயத்தில் உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் இல்லை.

 

ஓஹியோவில்(Ohio) உள்ள கிளீவ்லேண்ட் கிளினிக்கின் தூக்கக் கோளாறுகள் மையத்தின் உளவியலாளரும், தூக்க மருந்து மற்றும் நடத்தை நிபுணருமான மைக்கேல் ட்ரெரப் (Michelle Drerup) கூறுகையில்,

 

தீவிரமான உடல் செயல்பாடு அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்வது ஹிப்னிக் நிகழ்வுகளுக்கு வழிவகுக்கின்றது.

 

தூக்கத்தின் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன:

 

விரைவான கண் இயக்கம் அல்லாத அமைதியான தூக்கம் (NREM)

 

விரைவான கண் இயக்கம் கொண்ட தூக்கம் (REM) அல்லது முரண்பாடான தூக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

ஹிப்னாஜிக் ஜர்க்ஸ் பொதுவாக முதல் நிலை தூக்கத்தின் போது ஏற்படும். தூக்கத்தில் இது மிகவும் இலேசான நிலை. இது தூக்கமின்மை என தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.

 

இது பகல் நேரங்களில் தூங்கும் போதும், பேருந்து பயணங்களிலும் இரவில் அவ்வப்போது நிகழ்கிறது.

 

பெரும்பாலும், ஹிப்னிக் ஜெர்க்ஸ் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நினைவில் கொள்ளுங்கள்.

 

அதிக காஃபின் உட்கொள்ளல், மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை ஆகியவை ஹிப்னிக் ஜெர்க்ஸின் தீவிரத்தை அதிகரிக்கும்.

           

இரவு தூங்கும் முன்னர் காஃபி எடுத்துக்கொள்ளவேண்டாம்.

உங்கள் உடற்பயிற்சி நேரத்தை காலையில் வைத்துக்கொள்ளவும் தூங்கும் முன்னர் தியானம் செய்வது மனதிற்கு இதமான இசையை கேட்பதன் மூலமும் இது வராமல் தடுக்கலாம்.

 

இது அடிக்கடி ஏற்பட்டால் அது ஒரு தூக்க நோயாக மாற வாய்ப்புள்ளது மருத்துவரை சந்திப்பது நலம். மற்றபடி இது ஒரு சாதாரண விஷயம்தான் பயப்பட வேண்டியதில்லை.

அதற்கு மன அழுத்தத்தை கையாள்வதும்; சீரான தூக்கமும் காரணமாக இருக்கலாம்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்